செய்திகள்

அழகிய ராட்சசி! நந்தினியாக ஐஸ்வர்யா ராய் - வைரலாகும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனின் புதிய போஸ்டர்

6th Jul 2022 12:38 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியா நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம், குமாரவேல் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் ஆதித்தகரிகாலனாக விக்ரமும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும், வந்தியத் தேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்களின் விக்ரம் மற்றும் கார்த்தியின் தோற்றப் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதையும் படிக்க | பிரபல நடிகரின் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்'

இந்த நிலையில் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் தோற்றப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனின் நாவலை பொறுத்தவரை முக்கிய எதிர்மறை கதாப்பாத்திரமாக நந்தினியின் பாத்திரம் இருக்கும். அந்த வகையில் அதி முக்கியத்துவமான வேடம் அது.

பேரழகியாக வர்ணிக்கப்பட்டிருக்கும் நந்தினி கதாப்பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராய் மிக சரியான பொறுத்தம் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது. தற்போது இந்த போஸ்டர் அதனை உறுதிபடுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT