செய்திகள்

நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ டிரைலர் வெளியீடு

6th Jul 2022 08:13 PM

ADVERTISEMENT

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர்.

"வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 2743 பேருக்கு கரோனா தொற்று

சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT