செய்திகள்

டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்

6th Jul 2022 03:11 PM

ADVERTISEMENT

 

உடல் நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் உடல் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார். அங்கு அவரது மகன் சிம்பு உடனிருந்து டி.ராஜேந்தரை கவனித்துக்கொண்டார். 

இதையும் படிக்க |  நடிகர் விஜய்யின் 'வாரிசு' படக் கதை இதுதானா ? - வசனகர்த்தா விளக்கம்

ADVERTISEMENT

இந்த நிலையில் டி.ராஜேந்தர் முற்றிலும் குணமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்கள் அவர் அமெரிக்காவில் ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. 

தற்போது சிம்பு தனது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை திரும்புகிறார். வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ள சிம்பு, தற்போது பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT