இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களில் வில்லனாக நடித்து மிகவும் பிரபல வில்லனாக வலம் வருகிறார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
ADVERTISEMENT
இந்நிலையில், நடிகர் ராணா டகுபதி நடிக்க இருப்பதாக இருந்த முக்கியமான கதாப்பாத்திரத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி நடித்தாலே வில்லன் கதாப்பாத்திரம் என்ற அளவுக்கு அவர் பிரபலமாக இருப்பதால் இதிலும் வில்லனா என சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.