செய்திகள்

சாமியார் வேடத்தில் ரோபோ ஷங்கர்

5th Jul 2022 07:13 PM

ADVERTISEMENT

 

நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் இயக்குநர் ஆர். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் பரமானந்தாவாக நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘இரவின் நிழல்’ ‘உலகத்திலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம்’  என்ற பெருமையுடன் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில், படத்தில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. சிலக்கமாவாக நடிகை பிரிகடா, பிரேம குமாரியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகர் ரோபோ ஷங்கர் சாமியார் வேடத்தில் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோபோ ஷங்கர் பரமானந்தாவாக நடித்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT