செய்திகள்

இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிரபல அமெரிக்க இயக்குநர்

5th Jul 2022 05:20 PM

ADVERTISEMENT

 

பிரபல அமெரிக்க இயக்குநர் குவிண்டின் டரண்டினோ- அவரது மனைவி டேனில்லாவுக்கும் இரண்டாவது குழந்தைப் பிறந்துள்ளது. 

இயக்குநர் குவிண்டின் டரண்டினோ தனது நான் லீனியர் கதை சொல்லும் முறையில் மிகவும் பிரபலமானவர். ‘பல்ப் பிக்‌ஷன்’, ‘கில் பில்’, ‘டிஜாங்கோ அன்செயிண்ட்’, ‘ஒன்ஸ் அப்பான் அடைம் இன் ஹாலிவுட்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்க தெறிக்க படம் எடுப்பார்.  உலக சினிமா வகைமையில் அவரது படங்களுக்கென தனி ரசிக பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

2 முறை ஆஸ்கார் விருதினையும் பல்வேறு சரவதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வாங்கியுள்ளார்.

ADVERTISEMENT

டேனில்லா இஸ்ரேலியா பாடகர் பாடலாசிரியரான டிஜ்விக் பிக்கின் மகள். 2009 முதல் இவரும் இயக்குநர் டரண்டினோவும் காதலித்து வந்தனர். பின்னர் 2018இல் திருமணம் செய்துக் கொண்டனர். 2020இல் முதல் குழந்தை ’லியோ’ பிறந்தார். 

உலகப்புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ பட நடிகர் லியார்னோ டி காப்ரியோ இவரது 2 படங்களில் நடித்துள்ளார். இரண்டு படத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது பெயரைத்தான் இவரது குழந்தைக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியானது. 

இரண்டாவது குழந்தைக்கு தந்தையானதைப் பற்றி குவிண்டின் டரண்டினோ கூறியதாவது: 

பொதுமக்கள் எல்லோரும் எனது நண்பன் லியார்னோ டி காப்ரியோவின் பெயரை வைத்து விட்டதாக நினைக்கிறார்கள். அப்படி நினைத்தாலும் தவறில்லை. எங்களது குட்டி சிங்கத்துக்கு இப்போதைக்கு பெயர் வைக்கவில்லை. எனது மனைவியின் தாத்தாவுடைய பெயரை வைப்பதாக இருக்கிறோம். அதுதான் இப்போதைய முடிவு. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT