செய்திகள்

5 நொடிக்காக தாடி மீசை எடுத்த பிரபுதேவா

5th Jul 2022 07:42 PM

ADVERTISEMENT

 

நடன இயக்குநர் மற்றும் நடிகர் பிரபு தேவா 5 நொடிக்காக தாடி மீசை எடுத்தேனென விடியோ வெளியிட்டு பேசியுள்ளார். 

ராகவன் இயக்கத்தில் டி இமான் இசையில் பிரபு தேவா தற்போது ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். குழந்தைகளுக்கான படமாக உருவாகி வரும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபு தேவா விடியோ வெளியிட்டு பேசியதாவது:

ADVERTISEMENT

சிறிய வயதிலிருந்தே மீசை தாடி வைத்திருக்கிறேன். எல்லோரும் கேட்கும்போது எதையாவது காரணம் சொல்லி சமாளித்து விடுவேன். ‘மைடியர் பூதம்’ படத்திற்காக இயக்குநர் படத்திற்காக மீசை, தாடி எடுக்க வேண்டும் என கேட்டார். 5 நொடிக்காக மீசை எடுக்க வேண்டுமென்றார். என்னால் முடியாது என்றேன் முதலில். குழந்தைகளிடம் அப்போதுதான் பிரபலமாகும் என என்னை இயக்குநர் என்னை சமாதனப்படுத்தினார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT