செய்திகள்

மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரிஷா படம்

4th Jul 2022 05:43 PM

ADVERTISEMENT

 

திரிஷா மற்றும் சந்தோஷ் பிரதாப் இணைந்து நடித்துவரும் ரோட் திரைப்படம் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது. 

மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராம் படத்தில் நடித்துவரும் த்ரிஷா அடுத்ததாக தமிழில் ரோட் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். 

ரோட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண் வசீகரன் என்பவர் இயக்கிவருகிறார். இந்தப் படம் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் வசீகரனின் கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்க கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  ‘காளி’ போஸ்டர்: இந்து மத உணர்வாளர்கள் இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்

இந்தப் படத்தில் மியா ஜார்ஜ், சபீர் கல்லர்கல், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT