பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக புதிய முயற்சிகளை செய்துவருபவர் பார்த்திபன். தற்போது இரவின் நிழல் என்ற பெயரில் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படம் வருகிற ஜூலை 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. ஏ.ஆ.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரிஷா படம்
இரவின் நிழல் திரைப்படம் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுக்களை பெற்றது. மேலும் இரவின் நிழல் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கு 2 விருதுகளும், படத்துக்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது.
சர்வேதச திரைப்பட விழாக்களில் கிடைத்த பாராட்டு, திரையரங்குகளில் வெளியாகும்பதது ரசிகர்களிடமிருந்தும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.