செய்திகள்

‘காளி’ போஸ்டர்: குஷ்பு எதிர்ப்பு

4th Jul 2022 09:12 PM

ADVERTISEMENT

 

புகைப் பிடிக்கும்படி இருக்கும் ‘காளி’ பட போஸ்டருக்கு நடிகை மற்றும்  பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

காளி வேடமணிந்த ஒரு பெண்ணின் கையில் சிகரெட்டும், இன்னுமொரு கையில் பால்புதுமையினர் இனத்தின் கொடியும் இருந்தது. இன்னப்பிற கைகளில் தண்டாயிதம் சூலம் இருந்தது. இந்த புகைப்படம் இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியதால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. 

இதைக் குறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் சிறுபான்மையினரது கடவுளை இப்படி  சித்தரிக்கும் தைரியம் இருக்காது என நிச்சயமாக சொல்லுவேன். இதைக் ‘கலை’ என்று அழைக்கப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT