செய்திகள்

சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ முதல் பார்வை போஸ்டர் வெளியானது

4th Jul 2022 07:38 PM

ADVERTISEMENT

 

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

‘தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடிக்க இருபதாக தகவல் வெளியாகியுள்ளது. இசை- தேவி ஸ்ரீ பிரசாத். தயாரிப்பு நிறுவனம் ஆர்.பி. சவுத்ரி, என்விபிரசாத். 

முதல் பார்வை போஸ்டருக்கு விடியோ ஒன்றினையும் படக்குழு வெளியிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில், “எப்போதும் எங்கள் காட்பாதர் சிரஞ்சீவி தான்” என பதிவிட்டுள்ளனர்.  

 

ADVERTISEMENT
ADVERTISEMENT