செய்திகள்

கரண் ஜோகரின் படங்களால்தான் மகிழ்ச்சியில்லாத திருமணங்கள் நடக்கிறது : சமந்தா

3rd Jul 2022 04:55 PM

ADVERTISEMENT


‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சமந்தா, இயக்குநர் கரண் ஜோகரின் படங்களால்தான் மகிழ்ச்சியில்லாத திருமணங்கள் நடக்கிறது என கருத்துத் தெரிவித்துள்ளார். 

‘தி ஃபேமிலி மேன்-2’ திரைப்படத்தில் அவருக்கென தனிமுத்திரையைப் பதித்தார். அதே சமயம் ‘மஜிலி’ எனும் குடும்ப பாங்கான படமும் பெரும் வெற்றியடைந்தது. சமீபத்தில் சமந்தாவுகும் அவரது கணவருக்கும் விவாகரத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கரண் ஜோஹர் நடத்தும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சமந்தா கலந்துக் கொண்டார். இதில் சமந்தா பேசியது வைரலானது. அவர் பேசியதாவது: 

மகிழ்ச்சியில்லாத திருமணங்கள் நடைப்பெற காரணமே நீங்கள்தான். நீங்கள் உங்கள் படங்களில் ‘கே3எஃப்- கபி குஷி கபி காம்’ மாதிரி காட்டுகிறீர்கள்; ஆனால் வாழ்க்கை ‘கேஜிஎஃப்’ மாதிரி  இருக்கிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT