செய்திகள்

ருத்ரன் படம் எப்போது வெளியாகும்?: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

3rd Jul 2022 05:31 PM

ADVERTISEMENT

ருத்ரன் படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் சரக்குமார் நடித்துள்ளார்.

படத்திற்கு ஆர்டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் ருத்ரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

காஞ்சனா வரிசைப் படங்களை தவிர ராகவா லாரன்ஸின் படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே ருத்ரன் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்து உள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT