செய்திகள்

நடிகை சாய் பல்லவியின் 'கார்கி' திரைப்பட வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு

2nd Jul 2022 07:30 PM

ADVERTISEMENT

நடிகை சாய்பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. 

இதையும் படிக்க | அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT