செய்திகள்

'நினைச்சா தோணும் இடமே...' - மனைவி நயன்தாரா குறித்து உருகிய விக்னேஷ் சிவன் - வைரலாகும் புகைப்படங்கள்

2nd Jul 2022 04:59 PM

ADVERTISEMENT

 

தன் மனைவி நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். 

நீண்ட ஆண்டுகளாக காதலித்துவந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவரது திருமணத்துக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

இருவரது திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகள், நயன்தாரா அணிந்திருந்த உடை என அனைத்தும் செய்திகளானது. திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்களை பத்திரிகயாளர்கள் புகைப்படங்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி, திருப்பதி கோவிலில் நயன்தாரா காலணி அணிந்திருந்தாக சர்ச்சையானது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிடுகிறேனா? - நடிகர் விஷால் விளக்கம்

பத்திரிகையாளர்கள் சூழந்துகொண்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புகேட்டு திருப்பதி கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தற்போது இருவரும் தற்போது தாய்லாந்து நாட்டில் தங்கள் தேனிலவு நாட்களைக் கழித்துவருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. விரைவில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், நினைச்சா தோணும் இடமே என காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் நான் பிழை பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT