செய்திகள்

3D தொழில்நுட்பத்தில் உருவாகும் விக்ரம் - பா.ரஞ்சித் படம்

2nd Jul 2022 03:21 PM

ADVERTISEMENT

 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் படம் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகளில் தற்போது பா.ரஞ்சித் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாம். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' பாடல் ப்ரமோ விடியோ

இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்படவுள்தாகவும் கூறப்படுகிறது. முன்னதாக பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா திரைப்படம் 70களில் பின்னணியில் சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். குறிப்பாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் சந்தோஷ் நாராயணனுக்கும் பா.ரஞ்சித்துக்கும் இடையே மனஸ்தாபம் இருந்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள நட்சத்திரங்கள் நகர்கிறது படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளாராம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT