செய்திகள்

துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' பாடல் ப்ரமோ விடியோ

2nd Jul 2022 02:48 PM

ADVERTISEMENT

 

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள சீதா ராமம் படத்தின் இரண்டாவது பாடல் ப்ரமோ வெளியாகியுள்ளது. 

ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா நடிக்க சுமந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''மூச்சு இருக்கும் வரை...'' - தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நாசர் விளக்கம்

ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை விஜயாந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிஎஸ் வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து இரண்டாவது பாடலின் ப்ரமோ வெளியாகயுள்ளது. முழு பாடல் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது. மகாநடி படத்துக்கு பிறகு துல்கர் சல்மானின் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT