செய்திகள்

அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’

2nd Jul 2022 06:41 PM

ADVERTISEMENT

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிக்க | 'தரமான சம்பவம் காத்திருக்கு' - அனிருத் பகிர்ந்த செம அப்டேட்

 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தத் திரைப்படம் குறித்த புதிய தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கு இந்தப் படத்திற்கு கேப்டன் மில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாறுபட்ட தோற்றத்தில் உருவாகிவரும் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT