செய்திகள்

நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கியது அமீரகம்

1st Jul 2022 08:09 PM

ADVERTISEMENT

நடிகர் சிலம்பரசனுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.

இதையும் படிக்க | வெளியானது ‘பத்தல பத்தல’ பாடல் விடியோ

இந்தியாவின் பல்வேறு திரைப்பிரபலங்களுக்கும் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரான சிலம்பரசனுக்கு வெள்ளிக்கிழமை கோல்டன் விசா வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT