செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்

29th Jan 2022 03:06 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தேர்தலின்போது விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார். 

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது. தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கணிசமான இடங்களில் வென்றால் அது விஜய்க்கு பிற்காலத்தில் உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். 

இதையும் படிக்க | பிரபல நடிகரின் படப் பாடலுக்கு இயக்குநர் 'சிறுத்தை' சிவா விமர்சனம்: வைரலாகும் வாட்ஸ் ஆப் பதிவு

ADVERTISEMENT

இதனையடுத்து சென்னை பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. 

இந்த நிலையில் விஜய் மக்கள் மன்றத்தின் கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் என்று பதிலளித்துள்ளது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT