செய்திகள்

விக்ரம் - துருவ்வின் 'மகான்': நாச்சியாக கலக்கும் சிம்ரன்: அதிகாரப்பூர்வ தகவல்

29th Jan 2022 01:18 PM

ADVERTISEMENT

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ள படம் 'மகான்'. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லிலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

முதன்முதலில் அப்பா - மகன் இருவரும் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆவலாக இருந்ததனர். படம் ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பு அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 

இதையும் படிக்க | வெளிநாடு சென்று திரும்பிய அல்லு அர்ஜுன்: மகளின் வித்தியாசமான வரவேற்பால் நெகிழ்ச்சி

ADVERTISEMENT

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா சத்யவான் என்ற வேடத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தில் சிம்ரன் நாச்சி என்ற வேடத்திலும், சனந்த் ராக்கி என்ற வேடத்திலும், முத்துக்குமார் இந்தப் படத்தில் ஞானம் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். 

சிம்ரன் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பெரும்பாலான படங்களில் பாபி சிம்ஹா மற்றும் சனந்த் நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் இருந்து எவன்டா எனக்கு கஸ்டடி என்ற பாடல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.  விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனே பாடியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT