செய்திகள்

திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா மேடையில் பாடும் விடியோ

29th Jan 2022 06:11 PM

ADVERTISEMENT

 

தென்னிந்திய மொழி திரைப்படங்களில் 80, 90களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு பாடலுக்கு கவர்ச்சிகரமாக நடனமாடுவதாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி அதில் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். அவர் திறமையான நடிகை என்பதற்கு அலைகள் ஓய்வதில்லை படமே சான்று. 

திரைப்பட போஸ்டர்களில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தால் போதும், கதாநாயகன் யார் என்று பார்க்காமல் கூடடம் கூடுமாம். அந்த அளவுக்கு தனது அழகால் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தார். 

திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே யாரும் எதிர்பாராத வண்ணம் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அவரது மரணத்துக்கு காரணம் இதுவரை மர்மமாகவே இருந்து வருகிறது. யாருக்கும் அவரது மரணத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பீஸ்ட்' படத்தில் செல்வராகவன் வேடம் இதுவா?

அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேலானாலும், இன்றும் அவரது விடியோ ஒன்று ஏதோ ஒரு வகையில் வைரலாகி அவர் குறித்து நியாபகத்தை மக்களுக்கு கொண்டுவந்துதான் இருக்கிறது.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதா மேடையில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுராங்கனி என்ற பாடலை அவர் பாடும் போது அரங்கம் கரவொலிகளால் அதிர்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT