செய்திகள்

கவின் - ரெபா நடித்துள்ள 'ஆகாஷ் வாணி' முதல் பார்வை போஸ்டர் இதோ

29th Jan 2022 06:39 PM

ADVERTISEMENT

 

லிஃப்ட் படத்துக்கு பிறகு நடிகர் கவின் நடித்துள்ள ஆகாஷ் வாணி இணைய தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

நடிகர் கவின் - ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்துள்ள இணைய தொடர் ஆகாஷ் வாணி. இந்தத் தொடர் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தத் தொடரை எனோக் எழுதி இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க | திடீரென வைரலாகும் சில்க் ஸ்மிதா மேடையில் பாடும் விடியோ

ADVERTISEMENT

இந்த இணைய தொடரின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக வெளியிட்டு, வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நடிகர் கவின் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இந்தத் தொடருக்கு குணா இசையமைக்க, சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் இந்தத் தொடருக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்தத் தொடர் எப்பொழுது வெளியாகும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT