செய்திகள்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகார்த்திகேயனின் 'டான்' படங்கள் வெளியாகும் தேதி?

28th Jan 2022 02:31 PM

ADVERTISEMENT

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்தப் படம் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகித பேருக்கு தான் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய படங்கள் எல்லாம் தங்கள் படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளன. இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் பிப்ரவரி 4க்கு பதிலாக பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிக்க | பொன்னியின் செல்வனில் போர்க் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் : அனுபவம் பகிரும் பிரபலம்

ADVERTISEMENT

இதன் ஒரு பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. டான் படத்தை புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், பால சரவணன், மிர்ச்சி விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT