செய்திகள்

காதலருக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானி ஷங்கர்

28th Jan 2022 03:18 PM

ADVERTISEMENT

 

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜ் மா. பதின் வயது இளைஞராக இருந்து சிறந்த மனிதராக மாறியது வரை உன்னை பார்த்திருக்கிறேன். உனக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் துவங்கிய பிரியா பவானி ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்தார். இந்தத் தொடரில் ரசிகர்களிடையே அவருக்கு கிடைத்த வரவேற்பு திரையுலகில் அடியெடுத்து வைக்க காரணமாக அமைந்தது. 

இதையும் படிக்க | சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', சிவகார்த்திகேயனின் 'டான்' படங்கள் வெளியாகும் தேதி?

ADVERTISEMENT

அவர் கதாநாயகியாக நடித்த மேயாத மான், மான்ஸ்டர் திரைப்படங்கள் வெற்றிபெற்றதன் காரணமாக தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது. தற்போது தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். 

தற்போது குருதியாட்டம், பொம்மை, ஹாஸ்டல், யானா, ருத்ரன், பத்து தல, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT