செய்திகள்

'விஜய் வழக்கில் தொடர் நடவடிக்கை கூடாது' - நீதிபதி உத்தரவு

28th Jan 2022 12:11 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய் தனது ரோலஸ் ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்து ரூ. 1 லட்சம் அபராதம் வித்தித்து உத்தரவிட்டனர்.

மேலும் நடிகர்கள் மறறவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்ததது. அப்போது, ''காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி சொன்ன கருத்து என்னை புண்படுத்தியுள்ளன. சொந்த உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | விஜய் - இயக்குநர் வம்சி இணையும் படம்: வசனம் எழுதும் தேசிய விருது பெற்ற பட இயக்குநர்

நிலுவை வரத்தொகையாக ரூ.32.30 லட்சத்தை கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி செலுத்தி விட்டோம்'' என்று விஜய்யின் மனுவில் கூறப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியத்தின் கருத்துகளை நீக்கப்படுவாத அறிவித்தனர்.

இந்த நிலையில் பிஎம்டபுள்யு காருக்கு நுழைவு வரி செலுத்த தாமதமானதால் 400 சதவிகிதம் கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தொடர் நடவடிக்கை கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT