செய்திகள்

பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல்

28th Jan 2022 05:59 PM

ADVERTISEMENT

 

கவின் தற்போது 'ஆகாஷ் வாணி' என்ற இணையத் தொடரில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடரை எனோக் இயக்கியுள்ளார். 

இந்தத் தொடரில் கவினுக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இந்தத் தொடர் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆகாஷ் வாணியின் முதல் பார்வை போஸ்டர் நாளை (ஜனவரி 29) வெளியாகிறது. 

கவின் தற்போது விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் 'ஊர் குருவி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அருண் இயக்குகிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விஷாலின் 'வீரமே வாகை சூடும்' பட புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' தொடர்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் கவின். ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளையும் கவின் தொகுத்து வழங்கியுள்ளார். 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் 'லிஃப்ட்' படத்தில் நடித்திருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகன இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT