செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் குக் வித் கோமாளி பிரபலம்: 6வது போட்டியாளர் அறிவிப்பு

28th Jan 2022 04:01 PM

ADVERTISEMENT

 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 6வது பாோட்டியாளராக பாலாஜி களமிறங்குகிறார். இவர் கடந்த பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் குக் வித் கோமாளி முதல் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நீண்ட ஆண்டுகளாக நடுவராக இருந்து வருகிறார்.

இதையும் படிக்க | காதலருக்கு வாழ்த்து சொன்ன பிரியா பவானி ஷங்கர்

ADVERTISEMENT

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் தனது மனைவி நித்யாவுடன் கலந்துகொண்டிருந்தார். வெளியில் அவர்கள் இருவருக்கிடையே இருந்த பிரச்னை, பிக்பாஸ் வீட்டிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக பிக்பாஸ் மிக சுவாரசியமாக இருந்தது. 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வருகிற 30 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் கவிஞர் சினேகன், ஜுலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT