செய்திகள்

தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அமலா நடிக்கும் 'கணம்' பாடல்

26th Jan 2022 05:44 PM

ADVERTISEMENT

 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் அமலா நடித்திருக்கும் படம் கணம். இந்தப் படத்தில் ஷார்வானந்த் நாயகனாக நடிக்க, ரித்து வர்மா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

மேலும் சதிஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இதையும் படிக்க | தனுஷுடனான பிரிவுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா

ADVERTISEMENT

தெலுங்கில் இந்தப் படம் ஒகே ஒக ஜீவிதம் என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலின் தமிழ் பதிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் இந்தப் பாடலை உமா தேவி எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT