செய்திகள்

'அன்பே சிவம்' தொடரிலிருந்து ரக்சா விலகியதற்கு இதுதான் காரணமா? அதிர்ச்சி தகவல்

26th Jan 2022 02:25 PM

ADVERTISEMENT

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்தவர் ரக்ஷா. இந்தத் தொடரில் அவரது வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனையடுத்து ஜி தமிழில் ஒளிபரப்பாகும் 'அன்பே சிவம்' தொடரில் ரக்சா அன்பு செல்வியாக நடித்து வந்தார். தனது கதாப்பாத்திரமான அன்புவாகவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன் காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பாளர்கள் அதிகரித்தனர். 

 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பிக் பாஸ் அல்டிமேட்: மூன்றாவது போட்டியாளர் இவரா?

இந்த நிலையில் திடீரென அன்பே சிவம் தொடரில் இருந்து ரக்சா விலகினார். அவருக்கு பதிலாக தற்போது கவிதா கௌடா நடித்து வருகிறார். ரக்ஷா வெளியேறியதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தது. 

ரக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ''நான் அன்பே சிவம் தொடரில் இருந்து வெளியேறியது இப்பொழுது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து அன்பே சிவம் குழு இப்பொழுதுவரை எனக்கு தெரிவிக்கவில்லை. அதுதான் அவர்களது வழக்கம் என்பதால் எனக்கு அதிர்ச்சியாக இல்லை. 

இதிலிருந்து கடந்து செல்வோம். என் மீது அன்பும் ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி. புதிய தொடரில் உங்களை சந்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT