செய்திகள்

'வெந்து தணிந்தது காடு' படத்தில் 5 வித்தியாசமான தோற்றங்களில் சிம்பு

25th Jan 2022 01:08 PM

ADVERTISEMENT

 

'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரித்துள்ளது. 

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' என்ற பெயரில் புதிய சின்னத்திரை தொடர்: வெளியான ப்ரமோ விடியோ

இந்த நிலையில் இந்தப் படத்தில் சிம்பு 5 வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முத்து என்ற வேடத்தில் சிம்பு நடித்துள்ளார்.

கதையின் படி இளம் வயது முதல் முதியவர் வரை முத்துவின் வாழ்க்கைப் பயணம் தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் காரைக்குடி, சென்னை, மும்பை ஆகிய நகரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT