செய்திகள்

எங்கள் குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்த முயற்சி: நடிகர் ஷாந்தனு குற்றச்சாட்டு

25th Jan 2022 02:24 PM

ADVERTISEMENT

 

ஷாந்தனு நடிப்பில் வெளியான முருங்கைக் காய் சிப்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தில் ஷாந்தனுவின் அப்பா பாக்யராஜும் நடித்திருந்தார். 

தற்போது விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ராவணக் கோட்டம் படத்தில் ஷாந்தனு நடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிக்க | 'வெந்து தணிந்தது காடு' படத்தில் 5 வித்தியாசமான தோற்றங்களில் சிம்பு

ADVERTISEMENT

இந்த நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தத் தகவலில், என் திரையுலக நண்பர்களுக்கு எங்கள் குடும்பத்தினரின் பெயரில் சில தவறான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எங்கள் பெயரை தவறாக பயன்படுத்து வருகிறார்கள். இதுகுறித்து விழிப்புடன் இருங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT