செய்திகள்

இமானுடன் 7வது முறையாக இணையவிருக்கும் பிரபல இயக்குநர்: விடியோ மூலம் அறிவிப்பு

25th Jan 2022 11:41 AM

ADVERTISEMENT

 

'வெண்ணிலாக் கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் இயக்குநர் சுசீந்திரன். ஒருபுறம் 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' என கமர்ஷியல் படங்கள் , மறுபுறம் அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு என வித்தியாசமான படைப்புகள் என இரண்டு வகை படங்களிலுமே தன் முத்திரையை பதித்து வருகிறார். 

இயக்குநர் சுசீந்திரன், சிம்புவுடன் இணைந்த 'ஈஸ்வரன்' திரைப்படம் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தது. தற்போது ஜெய் நாயகனாக நடிக்கும் சிவ சிவா படத்தை இயக்கியுள்ளார். 

இதையும் படிக்க | தனுஷ், அறிவு சேர்ந்து பாடிய மாறனின் முதல் பாடல்: ஜன. 26-இல் வெளியீடு

ADVERTISEMENT

இந்த நிலையில் இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்த நாள் நேற்று (திங்கள்கிழமை) கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ மூலம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நான் இமானுடன் 7வது முறையாக இணைந்து பணிபுரியவிருக்கிறேன். மே 1 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இது பெரும்பொருட் செலவில் உருவாகக் கூடிய படம். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்'' என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT