செய்திகள்

தனுஷ், அறிவு சேர்ந்து பாடிய மாறனின் முதல் பாடல்: ஜன. 26-இல் வெளியீடு

24th Jan 2022 11:00 PM

ADVERTISEMENT


தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் முதல் பாடல் விடியோ வரும் 26-ம் தேதி வெளியாகிறது.

துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் படத்தை இயக்கி வருகிறார். இதில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார், ஸ்மிருதி வெங்டர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க இளையராஜாவின் முதல் மாணவன் லிடியன்: புகைப்படம் பகிர்ந்து நெகிழ்ச்சி

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக் குழு அறிவித்துள்ளது.

தனுஷ் மற்றும் அறிவு பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். 

Tags : dhanush
ADVERTISEMENT
ADVERTISEMENT