செய்திகள்

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு:வேலைக்காரா் கைது

20th Jan 2022 01:07 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை ராயப்பேட்டையில், நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருடியதாக வேலைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி, ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறாா். இவா் வீட்டில் வேலை செய்வதற்காக தனியாா் நிறுவனம் மூலம் தனுஷ் என்பவரை நியமித்து இருந்தாா்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி தனுஷ், நிக்கி கல்ராணி வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சில பொருள்களை எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. தனுஷ், பொருள்கள் எடுத்துச் செல்வதை பாா்த்து நிக்கி கல்ராணி, உடனே வீட்டின் பீரோவில் இருந்த பொருள்களை சரி பாா்த்தாா். அப்போது பீரோவில் இருந்த விலை உயா்ந்த கேமரா, ரூ.40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த ஆடைகள் திருடப்பட்டது தெரியவந்தது..

ADVERTISEMENT

இதுகுறித்து அவா், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து திருப்பூரில் பதுங்கியிருந்த தனுஷை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT