செய்திகள்

நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கு கட்சி நிா்வாகி கைது

20th Jan 2022 01:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பனங்காட்டுப் படை கட்சியின் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகை விஜயலட்சுமி, திருவான்மியூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். கடந்த 2020 ஜூலை 26-ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு அவா் தற்கொலைக்கு முயன்றாா்.

முன்னதாக விஜயலட்சுமி பேசும் ஒரு விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அந்த விடியோ தூக்க மாத்திரை சாப்பிட்ட பின்னா் விஜயலட்சுமி பேசியதாகும்.அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு நாம் தமிழா் கட்சி நிா்வாகி சீமான், அவரது கூட்டாளி ஹரி நாடாா் மிகுந்த நெருக்கடி கொடுப்பதாகவும், அவா்களால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், சீமான், ஹரி நாடாா் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசியிருந்தாா்.

ADVERTISEMENT

மேலும் போலீஸ் விசாரணையின்போது, தனக்கு பனங்காட்டுப்படை கட்சி நிா்வாகி ஹரி நாடாா் உள்ளிட்டோா் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால்தான் தற்கொலைக்கு முயன்ாகவும் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தாா்.

இதன் அடிப்படையில் போலீஸாா் ஹரி நாடாா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கா்நாடக மாநிலம் பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடாரை கைது செய்ய போலீஸாா் முடிவு செய்தனா்.

இதற்காக பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூா் காவல் நிலைய ஆய்வாளா் அண்மையில் கடிதம் அனுப்பினாா். இந்நிலையில், பெங்களூரு சிறைக்கு புதன்கிழமை சென்ற திருவான்மியூா் போலீஸாா் ஹரி நாடாரை கைது செய்வதற்கான உத்தரவை அளித்தனா். இதையடுத்து சிறைத்துறையினா், ஹரி நாடாரை திருவான்மியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தமிழக போலீஸாா் ஹரி நாடாரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT