செய்திகள்

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட விஷ்ணு விஷால் உருக்கம்: ''எனக்கு கடந்த 10 நாள் மிக மோசமாக இருந்தது''

19th Jan 2022 04:19 PM

ADVERTISEMENT

 

கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மீண்டு வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு வழியாக கரோனாவில் இருந்து குணமடைந்தேன். எனக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனக்கு லேசான அறிகுறிகள் இல்லை. 

இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி புகழ்?: வாழ்த்திய சிவாங்கி

ADVERTISEMENT

கடந்த 10 நாட்கள் மிகக் கடுமையாக இருந்தது. மிக சோர்வாக இருந்தது. விரைவில் பழையபடி பணிகளில் ஈடுபடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார். 

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக காடன் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது எஃப்ஐஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ரவி தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT