செய்திகள்

பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே

19th Jan 2022 02:29 PM

ADVERTISEMENT

 

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் தோல்வியடைய தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். 

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்த ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்தப் பாடல் அவருக்கு புகழ் வெளிச்சத்தை தந்தது.

இதனையடுத்து அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அல வைக்குந்தபுரமுலோ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. குறிப்பாக இந்தப் படத்தின் பாடல்கள் இந்திய அளவில் மிகவும் பிரபலமானது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் - எப்போ தெரியுமா ?

இதனையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகின்றன.

பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சிகரமான படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பிகினி உடையில் அவர் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.  

 

ADVERTISEMENT
ADVERTISEMENT