செய்திகள்

நடிகை கொடூரமாக கொலை: கணவர் கைது

19th Jan 2022 03:00 PM

ADVERTISEMENT

 

வங்க தேசத்தை சேர்ந்த நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு 25 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் கலந்துகொண்டுள்ளார். 

இந்த நிலையில் வங்க தேசத்தில் தாக்காவின் கெரனிகஞ்ச் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் நடிகை ரைமாவின் உடல் சாக்குப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. காரணம் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்துள்ளது. 

ADVERTISEMENT

இதனையடுத்து அவரது கணவர் ஷாக்காவாண்ட் அலி நோபிள் மற்றும் அவரது வாகன ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஷாக்கவாண்ட் ஏற்கனவே தனது மனைவி ரைமாவை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். 

இதையும் படிக்க | பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே

இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரைமாவை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கொலைக்கான காரணம் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இதுகுறித்து ரைமாவின் கணவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ரைமாவின் மரணத்தில் சில நடிகைகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து காவல் துறையினரின் விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT