செய்திகள்

யுவன், கரு.பழனியப்பன் இணையும் ‘ஆண்டவர்’

18th Jan 2022 08:16 PM

ADVERTISEMENT

இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள திரைப்படத்திற்கு ஆண்டவர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வி.சி.ரவிசந்திரன் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இதையும் படிக்க | மாநில அரசின் குடியரசு விழாவில் தமிழக ஊர்தி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் பெயரை படக்குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

ADVERTISEMENT

ஆண்டவர் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே எல் படத்தொகுப்பு செய்கிறார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 23,888 பேருக்கு கரோனா தொற்று

விரைவில் இந்தத் திரைப்படத்தின் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT