நடிகர் விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்து நடித்திருக்கும் படம் வீரமே வாகை சூடும். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வருகிற 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக சில படங்களின் வெளியீடு தள்ளிப்போவதால் இந்தப் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை (புதன் கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT