பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய சும்மா சுர்ருனு பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடக் கூடியது என கூறப்படுகிறது.
இதையும் படிக்க | தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவை அறிவித்த நிலையில், சௌந்தர்யா செய்த முதல் வேலை
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.