செய்திகள்

நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து: பிரபல இயக்குநரின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

18th Jan 2022 11:54 AM

ADVERTISEMENT

 

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனையடுத்து இருவரது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

மேலும் இருவரது பிரிவு குறித்து ரசிகர்கள் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தங்கள் முடிவுகளை மதிக்கும்படி ரசிகர்களிடம் இருவரும் கேட்டுக்கொண்டனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நாக சைதன்யா மற்றும் சமந்தாவும் பிரிவதாக அறிவித்தனர். இந்த நிலையில் நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து செய்வது ரசிகர்களிடையே வேதனையை அளித்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ்ப் படம் 'ஜெய் பீம்': மாபெரும் சாதனை

இந்த நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து என்பது திருமணங்களில் உள்ள ஆபத்துகள் குறித்து இளைஞர்களுக்கு எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

காதலை திருமணங்களை விட வேறு எதுவும் கொலை செய்ய முடியாது. நீண்ட நாள் காதலிப்பதுதான் மகிழ்ச்சியின் ரகசியம். அதற்கு பதிலாக திருமணம் செய்துகொள்வது சிறைக்கு செல்வது போல என்று குறிப்பிட்டுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT