நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் முழு உடல் பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
கரோனாவில் இருந்து முற்றிலும் குணமான கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விக்ரம் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். மேலும் நேற்றைய தினம் (ஜனவரி 16) பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதையும் படிக்க | ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ்ப் படம் 'ஜெய் பீம்': மாபெரும் சாதனை
இந்த நிலையில் நேற்று அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முழு உடற்பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை முடிவடைந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.