செய்திகள்

விஷால் பட நடிகைக்கு கரோனா

17th Jan 2022 05:41 PM

ADVERTISEMENT

 

விஷால் தற்போது வீரமே வாகை சூடும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

து.பா.சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த தேவி 2 படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிக்க | விஜய்யிடம் கற்றுக்கொண்டதை தற்போதுவரை கடைபிடிக்கிறேன்: பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சி

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகை டிம்பிள் ஹயாத்தி தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ''வணக்கம், எல்லா பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொண்டும் எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.  

நான் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இதன் காரணமாகவே எனக்கு அறிகுறிகள் லேசாக இருக்கிறது. எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் முகக் கவசம் அணியுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT