செய்திகள்

அனிருத்தின் 25வது படம்: கொண்டாடும் ரசிகர்கள்

17th Jan 2022 02:55 PM

ADVERTISEMENT

 

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகெங்கிலும் ஹிட்டாகின. 

தொடர்ந்து அவர் இசையமைக்கும் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. விரைவிலேயே தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராகினார். அனிருத் பாடல் என்றாலே ஹிட் தான் என அவரது இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் வைரல் ஹிட்டாகி வருகின்றன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் அறிமுகமான 10 வருடங்களில் 25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தல் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அவரது 25வது படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT