செய்திகள்

லதா மங்கேஷ்கர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம்

17th Jan 2022 09:49 PM

ADVERTISEMENT


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்படி, அவர் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

அவரது உடல்நிலை குறித்த சமீபத்திய தகவலைப் பற்றி அவருக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது:

ADVERTISEMENT

"லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வயது காரணமாக அவர் குணமடைய நேரம் எடுக்கும்."

ADVERTISEMENT
ADVERTISEMENT