செய்திகள்

'சமந்தாதான் எனக்கு சிறந்த ஜோடி': நாக சைதன்யாவின் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

17th Jan 2022 06:32 PM

ADVERTISEMENT

 

நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்ததிலிருந்து இருவர் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டாகி வருகின்றன. 

நாக சைதன்யா தனது அப்பா நாகர்ஜுனாவுடன் இணைந்து நடித்த பங்கர்ராஜு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் 3 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படம் விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று திரைப்பட வர்த்தகர்களின் கணிப்பாக இருக்கிறது. சங்கராந்திக்கு வெளியாகவிருந்த ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்களின் வெளியீடு தள்ளிப்போனதும் பங்கர்ராஜு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விஷால் பட நடிகைக்கு கரோனா

இந்தப் படம் குறித்து நாக சைதன்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், உங்களுடன் ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு சரியாக பொறுந்துபவர்கள் யார் ? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா என சற்றும் தயங்காமல் பதிலளித்தார். 

பின்னர் உங்களது ஒரு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பினால் அது எந்தப் படமாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மஜிலி என்றார். 'மஜிலி' திரைப்படம் நாக சைதன்யாவும் சமந்தாவும் ஜோடியாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிவுக்கு பின்னரும் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஒருவர் குறித்து ஒருவர் இயல்பாக பேசிக்கொள்வது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT