செய்திகள்

ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீடு இப்படித்தான் இருக்கும் - வெளியான புதிய ப்ரமோ

17th Jan 2022 03:36 PM

ADVERTISEMENT

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் இறுதி நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் ஓடிடியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல் அறிவித்தார். 

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் காணலாம்.  இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழச்சியில் புதிய போட்டியாளர்களுடன் இதுவரை பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் கலந்துகொள்வார்கள். 

இதையும் படிக்க | வெளியானது 'குக் வித் கோமாளி 3' நிகழ்ச்சியின் 2வது ப்ரமோ

ADVERTISEMENT

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரமோ விடியோவில் பிக்பாஸ் வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களிடம் வெளிப்புற சுவரை மட்டும் உயரத்தை அதிகரித்து கட்டுமாறு கமல் கூறுகிறார்.

மேலும் வனிதாவின் குரல் பின்னணியில் ஒலிக்க, விட்டத பிடிக்க வீட்டுக்குள்ள வராங்க என்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. துவக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ளவிருக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT