செய்திகள்

கரோனா: தொடா்ந்துதீவிர சிகிச்சை பிரிவில்லதா மங்கேஷ்கா்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) தொடா்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து கடந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன. இருப்பினும் அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். அதன்படி அவா் தொடா்ந்து ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா்.

இந்நிலையில் அவரது உடல்நிலை தொடா்பாக உறவினா் ஒருவா் கூறுகையில், ‘லதா மங்கேஷ்கா் தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளாா். அவரது உடல்நிலை மேம்பட்டு வருகிறது. தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், லதா மங்கேஷ்கருக்கு நிமோனியாவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இதே தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 28 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 13-ஆவது வயதில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கா், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT